உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 64,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி

64,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி

புதுடில்லி : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்திற்கு, 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதித்து உள்ளதாக, வர்த்தக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.உள்நாட்டில் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதற்காகவும், விலையை சீராக வைத்திருப்பதற்காகவும், கடந்த 2023 டிசம்பர் 8ம் தேதியன்று, மத்திய அரசு, மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.எனினும், பிற நாடுகளிடம் இருந்து வரும் கோரிக்கை அடிப்படையில், வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என கூறப்பட்டது.அந்த வகையில், தற்போது வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு, வெங்காயம் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துஉள்ளது.என்.சி.இ.எல்., எனும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் வாயிலாக, வங்கதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலத்தில், 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளது. மதிப்பின் அடிப்படையில், வங்கதேசம், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு அதிகளவில் செய்யப்படுகிறது.

அரிசி ஏற்றுமதி

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துஉள்ளதை போலவே, தான்சானியாவுக்கு 30,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதித்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய, அரசு தடை விதித்திருந்தது. பின் மலேஷியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளின் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ