உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நடப்பாண்டிலும் வளர்ச்சி வாகனத்துறை நம்பிக்கை

நடப்பாண்டிலும் வளர்ச்சி வாகனத்துறை நம்பிக்கை

புதுடில்லி:நாட்டின் மொத்த பயணியர் வாகன விற்பனை, கடந்த 2023ல், முதல் முறையாக 40 லட்சத்தை தாண்டியதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான 'சியாம்' தெரிவித்துள்ளது.எஸ்.யு.வி., வகை வாகனங்களின் வலுவான தேவையை அடுத்து, பயணியர் வாகன விற்பனை, கடந்த ஆண்டு எட்டு சதவீதம் உயர்ந்து, 41.01 லட்சம் வாகனங்களாக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2022ம் ஆண்டில், 37.92 லட்சமாக இருந்தது.இரு சக்கர வாகனங்களின் விற்பனையும், 9 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2022ல், 1.56 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு 1.70 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.வணிக வாகனங்களும், 2022ல் இருந்த 9.33 லட்சத்தில் இருந்து, 9.78 லட்சமாக அதிகரித்துள்ளது.இதுகுறித்து, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வினோத் அகர்வால் கூறியதாவது:2023ம் ஆண்டு, வாகனத் துறைக்கு ஒரு திருப்திகரமான ஆண்டாக அமைந்தது. பயணியர் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒற்றை இலக்க விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே சமயம், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி கடந்த 2022ல் இருந்த 4.18 லட்சத்தில் இருந்து 6.80 லட்சமாக உயர்ந்துள்ளது.கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், பயணியர் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், தங்கள் அதிகப்பட்ச மூன்றாம் காலாண்டு விற்பனையை வெளிப்படுத்தின. இந்த வளர்ச்சி, நடப்பாண்டிலும் தொடரும் என்று வாகனத்துறை நம்பிக்கையுடன் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை