மேலும் செய்திகள்
மார்ச் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.96 லட்சம் கோடி
02-Apr-2025
புதுடில்லி:ஜி.எஸ்.டி., வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில், இதுவரை இல்லாத அளவில், 2.37 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 2017ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்து, இதுவே ஒரு மாதத்தின் அதிகபட்ச வரி வசூலாகும். இதற்கு முன்னதாக, கடந்தாண்டு ஏப்ரலில் 2.10 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. கடந்த மார்ச் வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏப்ரலை பொறுத்தவரை, உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து கிட்டத்தட்ட 1.90 லட்சம் கோடி ரூபாயும்; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து 46,913 கோடி ரூபாயும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளது. 27,341 கோடி ரூபாய்க்கு ரீபண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ரீபண்டுகளை கழித்த பின், நிகர ஜி.எஸ்.டி., வசூல் 9.10 சதவீதம் அதிகரித்து, 2.09 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரலில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாய் 13 சதவீதம் அதிகரித்து, 13,831 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜி.எஸ்.டி., வருவாய் 11 சதவீதம் அதிகரித்து, 11.78 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.
02-Apr-2025