மேலும் செய்திகள்
சிறு தொழில்கள் கடன் பெற தொழில் பூங்காவில் முகாம்
21-Feb-2025
புதுடில்லி:நாட்டில் வீட்டுக்கடன் பெறுவது 14 சதவீதம் அதிகரித்து, கடந்தாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி மொத்த கடன்தொகை 33.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக என்.எச்.பி., எனும் தேசிய வீட்டுவசதி வங்கி தெரிவித்து உள்ளது. என்.எச்.பி., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:இந்தியாவில் வீட்டுக்கடன் பெறுவது கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி மாத 14 சதவீதம் அதிகரித்து, தொகை 33.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், 44 சதவீத பங்குடன் நடுத்தர வருமானம் ஈட்டும் பிரிவினர் முதலிடத்தில் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினர், 39 சதவீத பங்குடன் இரண்டாம் இடத்திலும்; அதிக வருமானம் ஈட்டும் பிரிவினர், 17 சதவீத பங்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 4.10 லட்சம் கோடி ரூபாய்க்கு வீட்டுக்கடன் பெறப்பட்டுள்ளது. வீட்டுவசதி துறையின் எதிர்கால கண்ணோட்டத்தை பொறுத்தவரை சிறப்பாகவே உள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம், நகரமயமாக்கலுக்கான முயற்சிகள் உள்ளிட்ட சமீபத்திய மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் அதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துஉள்ளது. வீடு வாங்குபவர்களின் தேவையை பூர்த்தி செய்வதில், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கடன் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பதில் சில சலுகைகள் வழங்குவது, சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் விரைவாக கடன் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட காரணங்களால், வீட்டுக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடனில் மண்டல ரீதியான வித்தியாசங்கள் தொடர்கின்றன. நாட்டின் தெற்கு, வடக்கு, மேற்கு மாநிலங்களிலேயே அதிகப்படியான வீட்டுக் கடன்கள் பெறப்படுகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடன் வழங்கல் குறைவாகவே உள்ளது. இந்த மாநிலங்களில் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் கிளைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.இந்த சிக்கலை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளின் ரொக்க இருப்பையும், வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் தொலைதுார இணைப்பு வசதியையும் ஒன்றிணைத்து, இதுவரை வீட்டுக் கடன் வசதி இல்லாத இடங்களுக்கும் இந்த வசதி கொண்டு சேர்க்கப்படும் என, என்.எச்.பி., தெரிவித்துள்ளது.
21-Feb-2025