UPDATED : டிச 31, 2025 08:12 AM | ADDED : டிச 31, 2025 01:29 AM
புதுடில்லி: நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் புதிய வீடுகளின் விற்பனை, எண்ணிக்கை அடிப்படையில் 14 சதவீதம் சரிந்துள்ளதாக 'அனராக்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்காக சென்னையில் மட்டும் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்தாண்டு விற்பனை எண்ணிக்கை நான்கு சதவீதம் குறைந்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நடப்பாண்டும் சரிவு கண்டுள்ளது. விலை உயர்வு காரணமாக, மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எண்ணிக்கை குறைந்திருந்தாலும் விற்பனை மதிப்பு அதிகரித்துள்ளது.
சரிவுக்கான காரணங்கள்:
* வீடுகளின் விலை உயர்வால், நடுத்தர மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது.* கட்டுமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஆடம்பர வீடுகளை கட்டுவதில் கவனம். * இதனால், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் வருகை குறைந்துள்ளது. * நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கட்டுமான நிறுவனங்களால் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர இயலாதது. * புவிசார் அரசியல் பதற்றங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு, அமெரிக்க வரி விதிப்பு ஆகியவை சந்தையில் ஒருவித தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.