வீடுகள் விற்பனை சென்னையில் 5 சதவீதம் வீழ்ச்சி
சென்னை:கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில், சென்னையில் வீடுகள் விற்பனை 5 சதவீதம் சரிந்ததாக, பிராப்டைகர் டாட் காம் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் வீடு விற்பனை, 2023 அக்டோபர் - டிசம்பருடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைந்ததற்கு, விலை உயர்வும், வீடு வாங்குவோர் எச்சரிக்கை காப்பதும் காரணம்.சென்னையில் புதிய கட்டுமான துவக்கங்கள் 34 சதவீதம் அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் முக்கிய எட்டு நகரங்களில், ஐந்தில் கட்டுமான துவக்க எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டது.உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முக்கிய மாநில தேர்தல்கள், நாடு முழுதும் சொத்து விலை அதிகரிப்பு போன்றவை இதற்கு காரணம் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.