உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரக்கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்

ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தரக்கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்

புதுடில்லி:சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.இதுகுறித்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருப்பதாவது:சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவுப் பிரிவாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்பை கட்டாயம் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்வதுடன், மேம்படுத்தப்பட்ட தர நிர்ணயங்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். இதற்கான மத்தியஉரிமம் வைத்திருப்போர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை குறைக்கும் நோக்குடன், ஆண்டு ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.

நுகர்வோருக்கு என்ன பயன்?

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்க உரிமம் பெறுவதற்கு மற்றும் பதிவு செய்வதற்கு முன், ஆலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதிக ஆபத்து வகையில் ஒரு உணவுப்பொருள் சேர்க்கப்பட்டால் ஆய்வுகள் கடுமையாக நடைபெறும். இது நுகர்வோர் உடல் நலனை பாதுகாக்க உதவும். பாட்டில் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இரண்டில் இருந்தும் இரட்டைச் சான்றிதழ் பெற வேண்டும். இதை நீக்கக்கோரி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. எனவே, பி.ஐ.எஸ்., சான்றிதழ் நீக்கப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தனது கட்டுபாட்டை கடுமையாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath Kumar
டிச 04, 2024 09:42

தண்ணீரின் மாசு மிக்வும் மோசம் உண்ணவோ பாதுகாப்பு துறை தண்ணீர் பிசினஸ் செய்ப்பவர்களி உடனடியாக காலா ஆய்வு செய்து தவறாக இருக்கும் நிலையில் உடனடியாக நடவடிக்கை ஏடுக்கவேண்டும் அணைத்து தண்ணீர் வியாபாரம் செய்ப்பவர்களி உலக தார் சான்றிதழ் வாங்க செய்யவேண்டும் அதன் ஓலம் ஓரள்வது குடி நீர் பாதுகாக்கப்படும் அணைத்து நிறுவனத்திலும் ஆயு கூடம் இருப்பது கட்டாயம் ஆக பட வேண்டும் ஆறு மாதகாலத்துக்கு ஒரு முறை உண்ணவோ பாதுகாப்பு துறை இந்த நிறுவனக்களி களஆய்வு செய்தலாவாசியும் உண்ணவோ துறையில் தொழில் நுட்ப அறிவு உள்ளவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் இதிலரசியில் தளியிடு இருக்க கூடாது கடும் நடவடிக்கை மற்றும் தர கட்டுப்பாட்டின் மூலமாகத்தான் இதனை சரி செய்ய இயலும்


முக்கிய வீடியோ