உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பென்ஷன் திட்டத்தில் பெண்கள் பங்கு உயர்வு

பென்ஷன் திட்டத்தில் பெண்கள் பங்கு உயர்வு

'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தில், 2025 நிதியாண்டில் 11.7 மில்லியன் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் அளிக்கும் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் புதிதாக 11.7 மில்லியன் உறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 76 மில்லியனாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 10 மில்லியனுக்கு மேல் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள் என்றும் பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பென்ஷன் திட்டம், 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் 1,000 முதல் 5,000 ரூபாய் வரை உறுப்பினர்கள் பங்களிப்பிற்கு ஏற்ப பென்ஷன் பெற வழி செய்கிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகளை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் எளிதாக்கி இருக்கிறது.உறுப்பினர்களின் வங்கி சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு மூலம் பங்களிப்பு தொகை தானாக பிடித்தம் செய்து கொள்ளப்படும் வகையில் திட்டம் அமைந்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை