மேலும் செய்திகள்
அலுவலக வேலைவாய்ப்புகள் நவம்பரில் சென்னை முதலிடம்
23 minutes ago
ரிலையன்ஸ் ரீடெய்ல் தலைவரானார் ஜெயேந்திரன் வேணுகோபால்
22 hour(s) ago
பெங்களூரில் டிச., 9 - 13 வரை கட்டுமான இயந்திர கண்காட்சி
22 hour(s) ago
பெய்ஜிங், : சீனாவின் விரிவடையும் தேயிலை சந்தையில் பெரும்பங்கு இடம்பெறும் நோக்கில், ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முனைப்பாக உள்ளது. பெய்ஜிங்கில் இந்திய துாதரகம் ஏற்பாடு செய்துள்ள தேயிலை வாங்குவோர் - விற்போர் சந்திப்பில், சீனாவின் முன்னணி தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. சீனாவில் கிரீன் டீ பருகுவது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் டார்ஜிலிங் மற்றும் மசாலா டீ தயாரிப்புகளை சீன நுகர்வோர் அதிகம் விரும்புகின்றனர். அதற்கேற்ப, இந்த சந்திப்பில் இருதரப்பு தேயிலை துறையினர் தங்கள் தேயிலை கலாசாரத்தை காட்சிப்படுத்தினர். சீனாவுக்கு, கடந்த ஆண்டில் இந்தியா 178 கோடி ரூபாய்க்கு தேயிலை ஏற்றுமதி செய்திருப்பது தெரிய வருகிறது. எனினும், அரசின் ஏற்றுமதி அதிகரிப்பு முயற்சிகளால், இந்தாண்டு ஜன., -அக்., வரை 330 கோடி ரூபாய்க்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறைந்த அடர்த்தியுள்ள கிரீன் டீ ரகங்கள் ஆதிக்கம் செலுத்தும் சீனாவில், டார்ஜிலிங் மற்றும் மசாலா டீக்கு அதிகரித்துள்ள கிராக்கியை இது பிரதிபலிக்கிறது. தேயிலை வாங்குவோர் - விற்போர் சந்திப்பில் பங்கேற்ற இந்திய தேயிலை வாரிய அதிகாரிகளிடம், சீன டீ தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்திய டீ ரகங்கள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்தனர்.
23 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago