மேலும் செய்திகள்
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
3 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
3 hour(s) ago
பசுந்தேயிலைக்கு ஆதார விலை கிலோவுக்கு ரூ.40 வேண்டும்
3 hour(s) ago
புதுடில்லி:சீனாவில் இருந்து 'வேக்குவம் ஸ்டீல் பாட்டில்கள்' இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஸ்டீல் பாட்டில் உற்பத்தியாளர்கள் அரசை வலியுறுத்திஉள்ளனர். இந்தியாவிற்குள், தரமற்ற மற்றும் மலிவான வேக்குவம் பிளாஸ்க்குகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஏ.ஐ.எஸ்.பி.ஏ., எனப்படும் அகில இந்திய ஸ்டீல் பாட்டில்கள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து, வேக்குவம் ஸ்டீல் பாட்டில்கள் இறக்குமதி கடந்த 2019 - 20ம் நிதியாண்டு முதல் 2022 - 23ம் நிதியாண்டு வரை 35 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, இவ்வகை பாட்டில்களுக்கு, கட்டாய தரச்சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசம் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த கால அவகாசத்தை அரசு நீட்டிக்கக் கூடாது. இந்திய சந்தையில் கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, அரசு தளர்வை நீட்டிக்கக்கூடாது.எங்களது உற்பத்தி செலவை விட குறைவான விலையில் இறக்குமதி செய்யப்படும் பாட்டில்களால், எங்களின் 100 சதவீத திறனை பயன்படுத்த முடியவில்லை. இதனால் உள்ளூர் தொழில் பாதிப்படைவதுடன், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பாட்டில் களை விட, இந்தியாவில் பி.ஐ.எஸ்., தரச்சான்றிதழுடன் தயாரிக்கப்படும் பாட்டில் கள் தரமாக உள்ளதுடன், 18 மணி நேரம் வரை நீரின் வெப்பநிலையை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago