மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு; சரிவிலும் சளைக்காத முதலீட்டாளர்கள்
மும்பை : கடந்த அக்டோபர் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் 41,887 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. முந்தைய மாதத்தை விட இது 21 சதவீதம் அதிகம் என்றும்; குறிப்பாக ஒரு துறை அல்லது ஒரு தொழில் சார்ந்த முதலீடுக்கான, தீமேட்டிக் மியூச்சுவல் பண்டுகளில் அதிகளவு முதலீடு செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டு உள்ளது. பங்கு சார்ந்த முதலீட்டில் பெருமளவு தொகை முதலீடு செய்யப்பட்டதில், தொடர்ந்து 44வது மாதமாக அக்டோபரில் அதிக முதலீடு வந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபரில் பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி ஆகியவை 5 முதல் 6 சதவீத சரிவு கண்ட நிலையிலும்; பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு அதிகரித்தது. சந்தைகள் மீது நம்பிக்கை வைத்தும், விலை குறைந்த யூனிட்டுகளை அதிகளவில் வாங்க முடியும் என்ற நோக்கிலும், 40,000 கோடிக்கு மேல் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருப்பதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்து உள்ளது. செப்டம்பரில் 71,114 கோடி ரூபாய் மதிப்பிலான யூனிட்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில், அக்டோபரில் மொத்தம் 2.40 லட்சம் கோடி ரூபாய், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் திட்டங்களில், 1.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு குவிந்ததே இதற்கு காரணம் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.மியூச்சுவல் பண்டு சொத்து மதிப்பு 67 லட்சம் கோடிசெப்டம்பர்67.25 லட்சம் கோடிஅக்டோபர் பங்கு சார்ந்த பண்டுகளில் முதலீடு34,419 கோடிசெப்டம்பர்41,887 கோடிஅக்டோபர்