உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் வணிக மையம் அமைத்த ஜப்பான் மிசூஹோ

சென்னையில் வணிக மையம் அமைத்த ஜப்பான் மிசூஹோ

சென்னை:ஜப்பான் நாட்டை சேர்ந்த நிதி சேவைகளை வழங்குவதில் பெரிய நிறுவனமான மிசூஹோ குழுமம், சென்னையில் உலகளாவிய வணிக மையத்தை அமைத்துள்ளது. இது, உயர்தர தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த சேவைகள், 'ரோபோ' செயல்முறை, செயற்கை நுண்ணறிவு இணைய பாதுகாப்பு, வங்கி செயல்முறைகளில் முக்கிய பங்காற்றும்.தற்போது, 250 பணியாளர்களை கொண்ட சென்னை மையத்தில், அடுத்த ஆண்டில், 1,000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, மிசூஹோ இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் தர்மராஜா கூறுகையில், ''சென்னையில் அமைந்திருக்கும் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சிறப்பான சூழல், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் இருக்கும் திறமையான மனித வளம் உட்பட பல்வேறு அம்சங்கள் இருப்பதால் மிசூஹோ, சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது'' என்றார்.தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அதிகாரி விஷ்ணு கூறுகையில், 'அரசு, உலகளாவிய திறன் மையங்கள் துறையில் முதலீடுகளை ஈர்க்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. 'தேவையான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளங்கள் உள்ளதால், அரசின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ