உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜான்சன் லிப்ட்ஸ் ரூ.250 கோடி முதலீடு

ஜான்சன் லிப்ட்ஸ் ரூ.250 கோடி முதலீடு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகில் செங்காட்டில் உள்ள, 'லிப்டு'கள் உற்பத்தி ஆலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக, 'ஜான்சன் லிப்ட்ஸ்' நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜகந்நாதன், இயக்குநர் யோஹான் ஜான் கூறியதாவது: இந்தியாவில், 'லிப்டுகள்' தேவை ஆண்டுக்கு, ஒரு லட்சமாகவும், அதன் சந்தை மதிப்பு, 13,000 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனத்துக்கு, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், செங்காடு, மஹாராஷ்டிரா நாக்பூரில் ஆலைகள் உள்ளன. செங்காட்டில் உள்ள ஆலையில் மாதம், 600 லிப்டுகள் உற்பத்தியாகின்றன. இதை, ஆயிரமாக அதிகரிப்பது, விநாடிக்கு 4 மீட்டருக்கு மேல் வேகத்தோடு இயங்கும் லிப்டை பரிசோதிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணி ஆகியவற்றுக்காக, 250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். வீடுகளில் பயன்படுத்தும், 'ஈஸி ரைட் பிளஸ்' லிப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ