உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வலுவான நிலையில் ஜூன் வாகன விற்பனை

வலுவான நிலையில் ஜூன் வாகன விற்பனை

புதுடில்லி: நடப்பாண்டு ஜூன் மாதத்துக்கான, வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் விற்பனை அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.இதில், ஜூன் மாத விற்பனை, 4.84 சதவீதம் அதிகரித்து வலுவான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூனில், 19.11 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஜூனில், 20.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறியதாவது:நடப்பாண்டு ஜூனில், வாகன மற்றும் இயந்திர விற்பனை, நிலையாக இருந்தது. ஆண்டு அடிப்படையில், எந்த பிரிவும் சரிவை சந்திக்கவில்லை. ஆனால், கடந்த மாத விற்பனையை ஒப்பிடுகையில், 9.44 சதவீதம் சரிவடைந்துள்ளது.பண்டிகை மற்றும் திருமண காலங்கள், இருசக்கர வாகன தேவையை அதிகரித்தாலும், நிதி நெருக்கடி மற்றும் அதிகம் விரும்பும் வாகன மாடல்கள் இருப்பு குறைவாக இருந்ததால், இருசக்கர வாகன விற்பனை சற்று குறைந்தது.குறைவான பணப்புழக்கம், அதிக மழை ஆகியவற்றால் பயணியர் கார் விற்பனை குறைந்தாலும், அதிக சலுகை, இதர சேவைகள் ஆகியவை இதன் விற்பனையை துாக்கி நிறுத்தின.https://x.com/dinamalarweb/status/1942401385959756034விரைவான விநியோகம், வர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கையை அதிகரித்தது. புதிய வர்த்தக வாகன வரி, 'ஏசி' கேபின் விதிமுறை ஆகியவை வர்த்தக வாகன விலையை அதிகரித்துள்ளன. கட்டுமான துறையில், வாகன தேவை குறைந்ததால், விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ