உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிண்ணாக்கு ஏற்றுமதி 29% சரிவு

பிண்ணாக்கு ஏற்றுமதி 29% சரிவு

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் ஆக., வரை ஐந்து மாதங்களில், நாட்டின் பிண்ணாக்கு ஏற்றுமதி 28.51 சதவீதம் சரிந்துள்ளதாக, எஸ்.இ.ஏ., எனும் எண்ணெய் ஆலைகள் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 17.93 லட்சம் டன்னாக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டில் 12.82 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய சோயா பிண்ணாக்கின் விலை டன்னுக்கு 58 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதேநேரம், உலக சந்தையில் இதன் விலை கிட்டத்தட்ட 41 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதனால், இந்திய ஏற்றுமதி சரிந்துள்ளது. பிண்ணாக்கு ஏற்றுமதி (ஏப்.,–ஆக.,) பிண்ணாக்கு | கடந்த ஆண்டு | நடப்பாண்டுசோயாபீன் | 7.57 | 2.05கடுகு | 9.15 | 8.80ஆமணக்கு | 1.06 | 0.96நிலக்கடலை 0.15 | 0.03 (லட்சம் டன்னில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ