எல்.ஜி., ஐ.பி.ஓ.,வுக்கு அனுமதி
புதுடில்லி:தென்கொரியாவை தலைமையிடமாக கொண்ட எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ், டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.கடந்தாண்டு டிசம்பரில் புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, செபியிடம் விண்ணப்பித்து இருந்தது. இதன்படி, தென்கொரிய தலைமை நிறுவனத்தின் வசமுள்ள 10.18 கோடி பங்குகள் விற்பனை வாயிலாக 15,000 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, செபியின் ஒப்புதல் பெற்றதை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார்ஸ்க்கு பிறகு, எல்.ஜி., இந்திய பங்குச் சந்தைக்கு வரும் இரண்டாவது தென்கொரிய நிறுவனமாகிறது.