உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உள்ளூரில் உதிரிபாக தயாரிப்பு: பாரத் போர்ஜ் - ஆப்பிள் பேச்சு

உள்ளூரில் உதிரிபாக தயாரிப்பு: பாரத் போர்ஜ் - ஆப்பிள் பேச்சு

புதுடில்லி: இந்தியாவில் உதிரிபாகங்கள் தயாரிப்பை மேற்கொள்வதற்காக, 'பாரத் போர்ஜ்' நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், சீனாவை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மிகப்பெரிய இந்திய நிறுவனங்கள் சிலவற்றுடன் இணைந்து பணியாற்ற, ஆப்பிள் விரும்புகிறது. அதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிள் தன் இந்திய வினியோக அமைப்பை விரிவுபடுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஆப்பிள் போன்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க, மஹாராஷ்டிராவின் புனேவில் அமைந்துள்ள 'கல்யாணி' குழுமத்தின் அங்கமான பாரத் போர்ஜ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. பாரத் போர்ஜ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவை தளமாகக் கொண்ட ஆலைக்கு தேவையான உதிரிபாகங்களை, தயாரித்து வழங்கும் பொறுப்பை ஏற்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை