உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  இயந்திர கருவி பயன்பாடு ரூ.35,000 கோடியாக உயரும்

 இயந்திர கருவி பயன்பாடு ரூ.35,000 கோடியாக உயரும்

சென்னை:“நம் நாட்டில், நடப்பு நிதியாண்டில் இயந்திர கருவி பயன்பாட்டின் மதிப்பு, 35,277 கோடி ரூபாயாக அதிகரிக்கும்,” என, இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ரெங்கநாதன் தெரிவித்தார். சென்னையில் நேற்று சங்க நிர்வாகிகள் ஜிபக் தாஸ்குப்தா, ரெங்கநாதன் ஆகியோர் கூறியதாவது: நம் நாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் முழுதும் உள்ள நாடுகள் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவின் வேகமான வளர்ச்சியில் உற்பத்தி துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. உற்பத்தி துறையின் முதுகெலும்பாக இயந்திர கருவிகள் உள்ளன. இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க, இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 'இம்டெக்ஸ் பார்மிங்' சர்வதேச கண்காட்சி, 2026 ஜன., 21ம் தேதி முதல், 26ம் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இதில், அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இயந்திர கருவி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது இயந்திர கருவிகள் துறை, ஆண்டுக்கு 11% வளர்ச்சி கண்டு வருகிறது நம் நாட்டில், 2024ல், இயந்திர பயன்பாடு மதிப்பு 31,781 கோடி ரூபாய்; இந்தாண்டில் 35,277 கோடி ரூபாயாக உயர வாய்ப்பு இயந்திர கருவிகளில், 50 சதவீதம் வாகன துறைக்கு பயன்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை