மாருதிக்கு விதியை தளர்த்த மஹிந்திரா எதிர்ப்பால் சிக்கல்
புதுடில்லி; 'கபே' என்ற கார்ப்பரேட் சராசரி எரிபொருள் கட்டுப்பாடு விதிமுறைகளில் இருந்து, சிறிய கார்களுக்கு தளர்வு வழங்க மாருதி நிறுவனம் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு மஹிந்திரா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த விதிமுறைகளின் படி, நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த கார்பனை வெளியேற்றும் வகையிலான கார்களை, கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். கபே - 3 மற்றும் கபே - 4 விதிமுறைகள், 2027 முதல் 2037 ஆண்டுகளுக்குள் அமலாக உள்ளன.எனவே, எரிபொருள் கட்டுப்பாடு விதிமுறைகளை முடிவு செய்வதில், மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
மாருதி தரப்பு
•சிறிய கார்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ••மின்சார காராக மாறினால், விலை உயரும், வெகுஜன மக்கள் இதை வாங்க முடியாது. ••விதிகளை அமல்படுத்தினால் சிறிய கார்கள் உற்பத்தி பாதித்து, நடுத்தர மக்களின் கார் கனவு பொய்க்கும்
மஹிந்திரா தரப்பு
• சிறிய கார்கள், 60 சதவீத சந்தை பங்கு வைத்து இருந்தாலும், 50% அளவுக்கு கார்பன் வாயுவை வெளியேற்றுகின்றன. தளர்வால், நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த கார்பனை வெளியேற்றும் வகையில் கார்கள் மேம்படுத்தப்படாது. இது உலக போட்டி தன்மை, நாட்டின் மின்சார வாகன இலக்கை பாதிக்கும்.