உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மலேஷிய பாமாயில் விலை உயர்வு

 மலேஷிய பாமாயில் விலை உயர்வு

கோலாலம்பூர்: மலேஷியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா அதிகரித்ததன் காரணமாக, அந்நாட்டின் சந்தையில், தொடர்ச்சியாக நான்காவது நாளாக பாமாயில் விலை உயர்வு கண்டுள்ளது. உலகளவில் பாமாயில் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய நாடான மலேஷியாவில் இருந்து பாமாயில் ஏற்றுமதி, டிசம்பர் மாதத்தின் முதல் 25 நாட்களில், கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில், 1.60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 2,79,550 டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த மாதத்தின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில், இறக்குமதி 66 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலத் தேவையை முன்னிட்டு, இந்தியா பாமாயில் இறக்குமதியை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ