பிரிட்டன் நிறுவனத்தை விற்கும் மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ்
சென்னை: சென்னையை சேர்ந்த மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், தன் பிரிட்டன் துணை நிறுவனமான 'நோட்டோ' வின் 100 சதவீத பங்குகளை, இத்தாலியை சேர்ந்த சிமிகா ஆர்கானிகா இண்டஸ்ட்ரியல் மிலனீஸ் நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளது. நோட்டோ-வில் உள்ள அதன் முழுப் பங்குகளை விற்க இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளதாக சந்தையில் இந்நிறுவனம் தெரி வித்துள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு பின்னர் ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி பெறப்பட உள்ளது. இத்தாலி நிறுவனம், 250 கோடி ரூபாய்க்கு நோட்டோவை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.