உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ஜப்பான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன. அந்த வரிசையில், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், தமிழக அரசு மற்றும் ஜப்பானின் எஹிம் மாகாணம் இடையே, சென்னையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், தமிழக வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, எஹிம் மாகாணத்தின் கவர்னர் டோகிஹிரோ நகமுரா கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த, 70 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்த ஒப்பந்தம் வாயிலாக, வேளாண், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க உள்ளன. மேலும், அந்த தொழில் நிறுவனங்கள், தமிழக தொழில் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கும். இதுதவிர, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

8 hour(s) ago  



எண்கள்

8 hour(s) ago  


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை