மியூச்சுவல் பண்டில் பெண்களுக்கு சலுகை
புதுடில்லி:மியூச்சுவல் பண்டில், முதல் முறையாக முதலீடு செய்யும் பெண்களை ஊக்கப்படுத்த, அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க, திட்டமிட்டுள்ளதாக, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பெண்கள் சமமாக பங்கெடுக்காவிட்டால், நிதி உள்ளடக்கம் முழுமை பெறாது. எனவே, முதல் முறையாக சந்தையில் முதலீடு செய்யும் பெண்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். செபியின் இந்த நடவடிக்கையால் புதியவர்கள் சந்தைக்கு வருவதுடன், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பிரிவுகளையும் மியூச்சுவல் பண்டு அமைப்புக்குள் கொண்டுவர முடியும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.