உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., விவகாரம் செபி தலைவரின் விளக்கம் 8 ஆண்டுகளாக முடங்கிய விண்ணப்பம்

என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ., விவகாரம் செபி தலைவரின் விளக்கம் 8 ஆண்டுகளாக முடங்கிய விண்ணப்பம்

புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக அறிவித்து, எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் அதன் முயற்சி கைகூடவில்லை. செபி அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளதாவது: பொதுமக்களின் நலன்களை, வணிக நலன்கள் விஞ்சுவதை ஒருபோதும் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதிக்காது. பொதுமக்களின் நலன் சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஒழுங்குமுறை ஆணையத்தின் பொறுப்பாகும்.என்.எஸ்.சி.,யின் ஐ.பி.ஓ., திட்டங்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ளன. இதுகுறித்து ஆராய செபி குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், இது சம்பந்தமான அனைத்து சிக்கல்களையும் தீர்க்குமாறு, என்.எஸ்.சி.,யிடம் செபி கேட்டுக்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.செபி தயக்கம் ஏன்?* சில தரகர்களுக்கு முன்னுரிமை தந்ததால் எழுந்த, 'கோ-லொகேஷன்' ஊழல் புகார்* பலமுறை வர்த்தகத்தை முடக்கிய தொழில்நுட்ப கோளாறு சம்பவங்கள் * நிலுவையில் உள்ள சட்டரீதியான வழக்குகள்

நிறைவேறாத முயற்சி

2016 - புதிய பங்கு வெளியிட என்.எஸ்.இ., முதல்முறையாக விண்ணப்பித்தது2019 - ஐ.பி.ஓ., விளக்கங்கள் போதவில்லை என ஆவணங்களை செபி திருப்பி அனுப்பியது2019 - என்.எஸ்.இ., தரப்பில் இருந்து பதில் இல்லாததால், ரூ.1,100 கோடி அபராதம் விதித்தது செபி2024 - மீண்டும் அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பம்2025 மார்ச் - விண்ணப்பத்தை நிராகரித்தது செபி. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யவில்லை என தகவல்.2025 ஏப்ரல் - ஐ.பி.ஓ., தாமதத்துக்கு தீர்வு காண முயற்சிப்பதாக செபி தலைவர் பேட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

अप्पावी
ஏப் 18, 2025 06:45

இது அம்ரித் கால் ஹை. இன்னும் ஒரு 25 வருஷம் ஓட்டிட்டு, உச்சநீதிமன்றம் வரை வழக்கு போய், வரலாறு காணாத தீர்ப்பு வழங்குவாங்க ஹைன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை