உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது வளர்ச்சிக்கு உதவும்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றது வளர்ச்சிக்கு உதவும்

சென்னை :'உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றதன் வாயிலாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு, இம்மாதம், 15ம் தேதி முதல், 19ம் தேதி வரை நடைபெற்றது. அதில், பன்னாட்டு நிறுவனங்களின் நிறுவனர்கள், உட்பட பலர் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜா, தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர். தமிழக தொழில் துறை அரங்கும் அங்கு அமைக்கப்பட்டது.தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்து, தமிழக குழுவினர், பன்னாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுடன், 50க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியுள்ளனர். இதுகுறித்து, ராஜா கூறியதாவது:உலக பொருளாதார மாநாட்டில், தமிழகம் சார்பில் பங்கேற்றது, தமிழகத்தின் வளர்ச்சி பாதையை சீரமைப்பதில் மற்றொரு படியாகும். பல்வேறு துறைகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க, பல்வேறு நிறுவனங்களின் நிறுவனர்கள் உடனான சந்திப்புகள் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

17 hour(s) ago  



எண்கள்

17 hour(s) ago  


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை