உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரதமருடன் பெப்சி நிறுவன சி.இ.ஓ., சந்திப்பு

பிரதமருடன் பெப்சி நிறுவன சி.இ.ஓ., சந்திப்பு

புதுடில்லி:பெப்சிகோ குளோபல் தலைமை செயல் அதிகாரி ரமோன் லாகர்டா, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், இருநாடுகள் இடையே வர்த்தக உறவில் இறுக்கமான சூழல் நீடிக்கிறது. இந்நிலையில், அமெரிக்க பன்னாட்டு குளிர்பானம் மற்றும் ஸ்நேக்ஸ் நிறுவனமான பெப்சிகோவின் சி.இ.ஓ., பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அவருடன் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இயக்குநர் வாரிய உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கடந்த ஐந்து மாதங்களில், ரமோன் லாகர்டா இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார். முதல்முறையாக பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. ஏப்., - ஜூன் காலாண்டில் பெப்சிகோ நிறுவன குளிர்பான வர்த்தகம் சரிவு கண்டது. முன்கூட்டியே துவங்கிய பருவமழையின் காரணமாக சரிவு ஏற்பட்டதாக இந்நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி