| ADDED : பிப் 22, 2024 02:15 AM
பல்லடம்:'மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள 'ெஸஸ்' வரியை நீக்கி அரசாணை வெளியிட வேண்டும்' என, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான பி.சி.சி.,யின் செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது: தமிழகத்தில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கறிக்கோழி உற்பத்தி தொழில் நடக்கிறது. கறிக்கோழிகளுக்கு மக்காச்சோளம் பிரதான தீவனமாக உள்ளது. திருப்பூர், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் மக்காச்சோளம் மீது ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது.இதனால், எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கறிக்கோழி உற்பத்தி தொழிலுக்கும் இது இடையூறாக உள்ளது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.கடந்த ஆட்சிக் காலத்தில் செஸ் வரி நீக்கப்பட்டது. அதற்கான அரசாணை வெளியிடப்படாததால், தற்போது, மீண்டும் செஸ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு, மக்காச்சோளம் மீதான செஸ் வரியை ரத்து செய்வதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.