| ADDED : ஜன 30, 2024 10:54 AM
சென்னை:தமிழக மின் பகிர்மான கழகத்தின் கடன், 2023 மார்ச் நிலவரப்படி, 1.49 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில் அதிக அளவாக, தமிழக அரசின் 'பவர் பைனான்ஸ்' எனப்படும் மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய கடன், 45,850 கோடி ரூபாய்.தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், புதிய மின் திட்டங்கள், நடைமுறை மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறது.கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, மின் பகிர்மான கழகத்தின் கடன், 1.49 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அந்த ஆண்டில் நிலுவையில் உள்ள கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்காக, 38,499 கோடி ரூபாயை திரும்ப செலுத்தியுள்ளது.கடந்த, 2020 - 21ல் கடன், 1.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.