மேலும் செய்திகள்
சென்னை ஐ.ஐ.டி., உடன் அப்பல்லோ மைக்ரோ ஒப்பந்தம்
10 minutes ago
தமிழகத்தில் பேட்டரி சேமிப்புக்கு ஆர்டர் பெற்ற வாரீ குழுமம்
13 minutes ago
விக்ரம் சோலார் தமிழகத்தில் உற்பத்தி துவக்கம்
15 minutes ago
- நமது சிறப்பு நிருபர் - நாட்டில் அரியவகை காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க, 7,280 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அரிய வகை காந்தங்களின் முழு உற்பத்தி தொடரையும் உள்நாட்டுமயமாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதாவது, அரிய வகை ஆக்சைடுகளை உலோகங்களாக மாற்றி, உலோகங்களிலிருந்து கலவைகளை உருவாக்கி, இந்த கலவைகளிலிருந்து காந்தங்களை உருவாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 டன் அரிய வகை காந்தங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரிய வகை நிரந்தர காந்தங்கள் என அழைக்கப்படும் இவை, மிகவும் சக்திவாய்ந்தவை. மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு, வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நம் நாடு இறக்குமதி வாயிலாகவே பெருமளவு தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஏல நடைமுறையில் ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக ஆண்டுக்கு 1,200 டன் உற்பத்தி திறன் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு பின், ஆலை அமைக்க இரண்டு ஆண்டுகள், விற்பனை சார்ந்த ஊக்கத்தொகைக்கு ஐந்து ஆண்டுகள் என மொத்தம் ஏழு ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரிய வகை காந்த விற்பனை சார்ந்த ஊக்கத்தொகையாக 6,450 கோடி ரூபாயும்; மூலதன மானியமாக 750 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் இறக்குமதியை குறைத்து தற்சார்பை அதிகரிப்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது வரும் 2070க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய உதவுவது.
10 minutes ago
13 minutes ago
15 minutes ago