உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏ.ஐ., கணினி சேவைக்கு நிறுவனங்களை தேர்வு செய்ய விதிகள் தளர்வு

ஏ.ஐ., கணினி சேவைக்கு நிறுவனங்களை தேர்வு செய்ய விதிகள் தளர்வு

மத்திய அரசின் 'இந்தியா ஏ.ஐ.,' திட்டத்துக்காக, மேலும் 10,000 ஜி.பி.யு., சாதனங்களின் கணினி செயலாக்க சேவைகளை பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பங்களை உருவாக்க அதிக திறன் கொண்ட கணினிகள் தேவைப்படுகின்றன. இதற்காக, ஜி.பி.யு., சாதனங்களை வைத்துள்ள தரவு மைய நிறுவனங்களிடம் இருந்து கணினி செயலாக்க சேவைகளை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசின் 'சி-டாக்' அமைப்பு மேற்கொண்டு வருகிறது.தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், குறைந்த எண்ணிக்கையிலான சாதனங்கள் வைத்துள்ள நிறுவனங்களும் இந்த தேர்வில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

என்னென்ன விதிகள் தளர்வு?

ஒரே தரவு மையத்தில் முன்பு குறைந்தது 1,000 ஜி.பி.யு., சாதனங்கள் இருக்க வேண்டும். தற்போது 512 இருந்தால் போதும்.நிறுவனங்களின் தொழில்நுட்ப வசதிகளுக்கு 100க்கு மதிப்பெண் வழங்கப்படும். முன்பு குறைந்தது 75 பெற வேண்டும். தற்போது 60 பெற்றால் போதும்.முதற்கட்டத்தில் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க தேவையில்லை. முதலில் தொழில்நுட்பத் தகுதி ஆய்வு செய்யப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.13, 2026.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி