உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிரம்ப் அதிபர் ஆவதால் ஏற்படும் ரூபாய் மதிப்பு சரிவு தற்காலிகமே: பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை

டிரம்ப் அதிபர் ஆவதால் ஏற்படும் ரூபாய் மதிப்பு சரிவு தற்காலிகமே: பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை

புதுடில்லி: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்பதால், இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் தாக்கம் தற்காலிகமானது என, பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காண்பது ஒரு குறுகிய கால நிகழ்வு. அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஏற்பட்ட இந்த சரிவு, தற்காலிகமானது. டிரம்ப் பதவியேற்ற பிறகும் சிறிது நாட்களுக்கு இந்நிலை நீடிக்கலாம், பின்னர் ரூபாய் மதிப்பு மேம்படும்.அமெரிக்காவில் குடியரசு கட்சியின் ஆட்சிகளின் போதெல்லாம் இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாக இருந்துள்ளது வரலாறு. ஜனநாயக கட்சியின் ஆட்சிகளுடன் ஒப்பிடும்போது, ரூபாய் மதிப்பு குடியரசு கட்சி ஆட்சிகளின்போது நிலைத்தன்மையுடன் இருந்திருக்கிறது.கடந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மூன்று சதவீத சரிவு கண்டது. வீழ்ச்சிக்குப் பிறகும், சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான மற்ற நாடுகளின் கரன்சிகளைவிட ரூபாயின் ஸ்திரத்தன்மை அதிகம். சர்வதேச பத்திரங்கள் முதலீட்டு சந்தையில் இந்திய கடன் பத்திரங்கள் சேர்க்கப்பட்டது, ரூபாய் மதிப்பின் அதிக ஏற்றத் தாழ்வை தாங்கிக் கொள்ள உதவி புரிந்துள்ளது.எனவே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற சிறிது நாட்களில் இந்திய ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கி, நீண்ட கால அடிப்படையில், நிலைத்தன்மை பெறக்கூடும்.இவ்வாறு எஸ்.பி.ஐ., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் குடியரசு கட்சியின் ஆட்சிகளின் போதெல்லாம், இந்திய ரூபாய் மதிப்பு சிறப்பாக இருந்துள்ளது வரலாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை