இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா முதலிடம்
புதுடில்லி: இந்தியாவுக்கு அதிகளவில் சூரியகாந்தி எண்ணெய் வினியோகம் செய்யும் நாடுகளில், உக்ரைனை ரஷ்யா பின்னுக்கு தள்ளியது. கடந்த 4 ஆண்டுகளில், ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 12 மடங்கு அதிகரித்து உள்ளது. இது குறித்து சமையல் எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்ததாவது: ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே போர் துவங்கியதில் இருந்து, உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் சூரியகாந்தி எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலிவு விலை மட்டுமின்றி, ரஷ்யாவில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக எளிதில் அனுப்ப முடியும் என்பதால், இந்தியாவுக்கு சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியை படிப்படியாக அதிகரித்தது. கடந்த 4 ஆண்டுகளில், ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 12 மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 2021ல் ரஷ்யாவில் இருந்து 1.75 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மட்டுமே செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் பங்களிப்பு 10 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், கடந்தாண்டு இறக்குமதி 20.90 லட்சம் டன்னாக அதிகரித்து, 56 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு விலை கணிசமாக உயர்ந்ததன் காரணமாக ரஷ்யாவின் மொத்த இறக்குமதி 13 சதவீதம் சரிவை கண்டுள்ளது. எனினும், ரஷ்யாவின் பங்களிப்பு, நிலையாக 55 - 60 சதவீதமாக தொடர்கிறது. ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் ஆண்டு இறக்குமதி (லட்சம் டன்) பங்கு 2021 1.75 10% 2024 20.90 56% இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி ரஷ்யா, உக்ரைன் அர்ஜென்டினா ருமேனியா