உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இறக்குமதி அதிகரிப்பால் சென்னா விலை சரிவு

இறக்குமதி அதிகரிப்பால் சென்னா விலை சரிவு

புதுடில்லி:ஆஸ்திரேலியா, தான்சானியா நாடுகளில் இருந்து, சென்னா அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை சரிந்துள்ளது. வட மாநிலங்களின் முக்கிய சந்தைகளில் சென்னா விலை, செப்டம்பர் துவக்கத்தில் ஒரு குவின்டால் 8,000 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலை 7,200 ரூபாயாக குறைந்துஉள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சென்னா, மும்பையில் 7,200 முதல் 7,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், தான்சானியாவில் இருந்து வரும் சென்னா 6,500 முதல் 6,600 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தியாவிற்கான பருப்பு ஏற்றுமதிக்கான போட்டியில் பல புதிய நாடுகள் இணைந்துள்ளதால், விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3.7 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டதில், 75,000 டன் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுஉள்ளது. வரவிருக்கும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-. மேலும், 2024 சந்தைபடுத்துதல் பருவத்தில், எதிர்பார்த்ததைவிட குறைவாக உள்நாட்டு பயிர்களுடன், சென்னா விலை ஏற்றத்துடன் இருந்ததால், வினியோகத்தை அதிகரிக்க 66 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி