உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேவைகள் துறை ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 12 சதவிகிதம் உயர்வு

சேவைகள் துறை ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 12 சதவிகிதம் உயர்வு

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் இறக்குமதியும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதத்தில் 2.73 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 1.35 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் சேவைகள் துறையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் நிதி சேவைகள் நிறுவனங்களின் வலுவான செயல்பாட்டை இது பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலும் சேவைகள் துறை ஏற்றுமதி முறையே 8.80 சதவீதமும்; 9.60 சதவீதமும் வளர்ச்சி கண்டிருந்தன. இறக்குமதியை பொறுத்தவரை, மே மாதத்தில் 1.10 சதவீதம் சரிவு கண்டிருந்த நிலையில், கடந்த மாதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு தொழில் வல்லுநர் மற்றும் தொழில்நுட்ப சேவை களின் தேவை மீண்டும் அதிகரித்து வருவதை இது உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி