உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மதுரமங்கலத்தில் 400 ஏக்கரில் சிப்காட் புதிய தொழில் பூங்கா

மதுரமங்கலத்தில் 400 ஏக்கரில் சிப்காட் புதிய தொழில் பூங்கா

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் அருகில் மதுரமங்கலத்தில், 423 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா அமைக்கும் பணியை, 'சிப்காட்' துவக்க உள்ளது. காஞ்சிபுரம் அருகே, பரந்துாரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. எனவே, பரந்துார் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள மதுரமங்கலத்தில், 423 ஏக்கரில் புதிய தொழில் பூங்காவை, சிப்காட் அமைக்க உள்ளது. இதற்கான பணிகளை விரைவில் துவங்க, அரசின் அனுமதி கேட்கப்பட உள்ளது. இந்த பூங்காவில், 500 கோடி ரூபாயில் சாலை, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பூங்கா வாயிலாக, 10,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை