உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை நிலவரம்: தடுமாற்றத்துக்கு பின் ஏற்றம்

பங்கு சந்தை நிலவரம்: தடுமாற்றத்துக்கு பின் ஏற்றம்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தன. கட்டுமான நிறுவனமான எல் அண்டு டி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் ஏற்படுத்திய நேர்மறை தாக்கத்தால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. இருப்பினும், தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாத நிலையில், இந்தியாவுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களால், நேற்று நாள் முழுதும் சந்தையில் தள்ளாட்டம் காணப்பட்டது.முடிவில், நிப்டி, சென்செக்ஸ் சிறிய உயர்வுடன் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சந்தை குறியீடுகள்உயர்வுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்

செவ்வாயன்று அமெரிக்கச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் ; தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையுடன் வர்த்தகமாகின.https://x.com/dinamalarweb/status/1950718664296308793

உயர்வுக்கு காரணங்கள்

முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது.எல் அண்டு டி., நிறுவன நிதிநிலை முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 850 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.44 சதவீதம் குறைந்து, 72.19 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 89 பைசா சரிந்து, இதுவரை இல்லாத அளவுக்கு 87.80 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !