மேலும் செய்திகள்
பங்கு சந்தை நிலவரம்: மூன்றாவது நாளாக சரிவு
12-Jul-2025
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்
லேசான ஏற்றத்துடன் முடிவடைந்தன. இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று
வர்த்தகம் ஆரம்பித்த போதே, சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து, அமெரிக்காவில்
இறக்குமதியாகும் காப்பர் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க முடிவு
செய்திருப்பது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பதற்கான வாய்ப்பு
மங்கி வருவது ஆகியவை, உலகளாவிய சந்தையில் எதிரொலித்தன. இதன் தாக்கத்தால்,
பிற்பகல் வரை சந்தை குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின. மீண்டும் அன்னிய
முதலீடுகள் திரும்பியது, சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் போன்றவை
கைகொடுக்கவே, பிற்பகல் வர்த்தகத்தின் போது, ஐ.டி., நிறுவன பங்குகளை வாங்க
முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், நிப்டி, சென்செக்ஸ் சிறிய
உயர்வுடன் நிறைவடைந்தன. உலக சந்தைகள்
செவ்வாயன்று அமெரிக்க
சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின்
நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய்
எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள்
கலவையுடன் வர்த்தகமாகின.உயர்வுக்கு காரணங்கள்
* அன்னிய முதலீடுகள் மீண்டும் திரும்ப துவங்கியது * ஐ.டி., பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதுஉயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)மஹிந்திரா & மஹிந்திரா 2.38விப்ரோ 2.18டெக் மஹிந்திரா 1.87சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)ஸ்ரீராம் பைனான்ஸ் 2.37எட்டர்னல் 1.63சன் பார்மா 1.36நிப்டி: 25,212.05மாற்றம்: 16.25 ஏற்றம் பச்சைசென்செக்ஸ்: 82,634.48மாற்றம்: 63.57 ஏற்றம் பச்சைஅன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,858கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர். https://x.com/dinamalarweb/status/1945645804137619570கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.26 சதவீதம் குறைந்து, 68.55 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா குறைந்து, 85.94 ரூபாயாக இருந்தது.
12-Jul-2025