பி.எல்.ஐ., திட்டத்தில் முக்கிய பயனாளியாக உள்ளது தமிழகம் : நிர்மலா சீதாராமன்
சென்னை:மத்திய அரசின், மின்னணு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளுக்கான பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் தமிழகம் குறிப்பிடத்தக்க பயனாளியாக மாறியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசின், மின்னணு, மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தில், தமிழகம் மிகப்பெரிய பயனாளியாக உள்ளது. பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிறுவனங்களில் 25 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவை. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்திக்கான பி.எல்.ஐ., திட்டத்தில், நாட்டிலேயே 2வது பெரிய பயனாளியாக தமிழகம் உள்ளது. இவ்வாறு கூறினார்.