உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஜன., 19ல் டாவோஸ் மாநாடு தமிழகம் பங்கேற்கவில்லை

 ஜன., 19ல் டாவோஸ் மாநாடு தமிழகம் பங்கேற்கவில்லை

சென்னை : சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் வரும் ஜனவரியில், உலகின் முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. இதுவரை நடந்த மாநாடுகளில், தமிழக அரசின் தொழில் துறை உயர்மட்ட குழுவினர் தொடர்ந்து பங்கேற்ற நிலையில், இந்த முறை இதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, சட்டசபை தேர்தல் காரணமாக கூறப்பட்டாலும், ஏற்கனவே, வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்த விமர்சனமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில், நம் நாட்டில் இருந்து பல மாநிலங்களின் முதல்வர்கள், தொழில் துறை அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்பர். அவர்கள், நிறுவனங்களின் பிரநிதிகளை சந்தித்து, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா, அதிகாரிகள் அடங்கிய குழு இந்தாண்டும் ஜனவரியில் டாவோஸ் மாநாட்டிற்கு சென்றது. பல நிறுவனங்களின் பிரநிதிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. 'டாவோஸ் மாநாட்டால், 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக மஹாராஷ்டிரா அரசும், 1.79 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக தெலுங்கானா அரசும் அறிவித்தன. தமிழகம் முதலீடுகளை ஈர்க்கவில்லை' என, விமர்சனம் எழுந்தது. 'டாவோஸ் மாநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரங்கம் அல்ல; உலகளாவிய தொழில் வளர்ச்சி குறித்த தகவலை பரிமாறி கொள்வதற்கான வாய்ப்பு' என இதற்கு தொழில் துறை அமைச்சர் ராஜா, பதில் அளித்தார். இந்த சூழலில், வரும் 2026 ஜன., 19ல் துவங்கி ஒரு வாரத்திற்கு டாவோஸில் உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்ல வேண்டாம் என, தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டால், 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக மஹாராஷ்டிரா அரசும், 1.79 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக தெலுங்கானா அரசும் அறிவித்தன. தமிழகம் முதலீடுகளை ஈர்க்கவில்லை என விமர்சனம் எழுந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை