உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கடலுார் ஆலையில் டாடா கெமிக்கல்ஸ் ரூ.775 கோடி முதலீடு

 கடலுார் ஆலையில் டாடா கெமிக்கல்ஸ் ரூ.775 கோடி முதலீடு

சென்னை: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், கடலுாரில் உள்ள ஆலையை 775 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், சோடா சாம்பல், சோடியம் பை கார்பனேட், சிலிக்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்துக்கு, கடலுார் மாவட்டத்தில் தொழிற்சாலை உள்ளது. அங்கு, சிலிக்கா உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையை தற்போது, 775 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய டாடா கெமிக்கல்ஸ் முடிவு செய்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி