உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சந்தையில் பாதியாக குறைந்தது டாடா மின்சார கார்களின் பங்கு

சந்தையில் பாதியாக குறைந்தது டாடா மின்சார கார்களின் பங்கு

சென்னை:மின்சார கார் சந்தையில், ஐந்து ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதர வாகன நிறுவனங்களின் போட்டி காரணமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. 2022ல் 95 சதவீத சந்தை பங்கு வைத்து இருந்த டாடா நிறுவனம், இந்த ஜனவரியில் 44.60 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த ஆறு மாதத்தில், டாடா சந்தை பங்கு 31 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு, எம்.ஜி., நிறுவனம், மஹிந்திரா நிறுவனங்களின் போட்டியே காரணம். டாடா நிறுவன வீழ்ச்சியில், எம்.ஜி., நிறுவனத்திற்கு அதிக பங்கு உண்டு. ஏனெனில், கடந்த செப்டம்பரில் அறிமுகமான எம்.ஜி., யின் வின்சர் காருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஐந்து மாதங்களில், டாடா பஞ்ச் இ.வி., நெக்ஸான் இ.வி., கார்களை விட இந்த கார் அதிகம் விற்பனையானது.பிப்ரவரி 14 முதல் மஹிந்திராவின் பி.இ., - 6 மற்றும் எக்ஸ்.இ.வி., 9இ ஆகிய மின்சார கார்களின் முன்பதிவு துவங்க உள்ள நிலையில், வரும் மாதங்களில் டாடா நிறுவனம் மேலும் சவாலை எதிர்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை