உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் முதல் செலக் ஷன் ஹோட்டல்

சென்னையில் முதல் செலக் ஷன் ஹோட்டல்

சென்னை: சென்னையில் முதல் 'செலக் ஷன்' ஹோட்டலை அமைக்க, ஐ.எச்.சி.எல்., எனப்படும், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, 'ஜி.டி., பாரதி அர்பன் டெவலப்பர்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஐ.எச்.சி.எல்., துணைத் தலைவர் சுமா கூறியதாவது: கிட்டத்தட்ட 32 ஏக்கர் பரப்பளவில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த ஹோட்டல் அமைய உள்ளது. சிறப்பு உணவகம், பார் வசதி மற்றும் தங்கும் அறைகளை இது கொண்டிருக்கும். மேலும் மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் கூட்டங்கள் நடத்தும் வகையில் அரங்குகளும் இங்கு அமைக்கப்படும்.இப்பகுதியில் அதிகரித்து வரும் பயணத் தேவைகளை இது முழுமையாக பூர்த்தி செய்யும். ஹோட்டல் அமைப்பதற்கு, ஜி.டி., பாரதி அர்பன் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !