மண்டல கிராமப்புற வங்கிகள் 43லிருந்து 28 ஆக குறையும் நான்காம் கட்ட இணைப்பு நடவடிக்கை
புதுடில்லி:மண்டல கிராமப்புற வங்கிகளின் நான்காவது கட்ட இணைப்பு நடவடிக்கையால், அவற்றின் எண்ணிக்கை 43ல் இருந்து 28 ஆக குறையவுள்ளது.மண்டல கிராமப்புற வங்கிகள் சட்டம், 1976ன் கீழ், 196 கிராமிய வங்கிகள் செயல்பட்டு வந்தன. அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை, மத்திய அரசு 2004 - 05ம் நிதியாண்டில் துவங்கியது. மூன்று கட்டங்களாக நடந்த இணைப்பு நடவடிக்கையின் வாயிலாக, 2020-21ம் நிதியாண்டில், கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 196ல் இருந்து 43 ஆக குறைந்தது.அடுத்து, நான்காம் கட்டமாக, 43 வங்கிகளை 28 ஆக ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம் துவங்கியுள்ளது.மத்திய நிதி அமைச்சக திட்டத்தின்படி, பல்வேறு மாநிலங்களில் செயல்படும் 15 மண்டல கிராமப்புற வங்கிகள் ஒன்றிணைக்கப்பட உள்ளன. ஆந்திரா 4, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் தலா 3, பீஹார், குஜராத், காஷ்மீர், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 2 வங்கிகள் இந்த இணைப்பில் இடம்பெறவுள்ளன.பங்குகள்மத்திய, மாநில அரசுகள், வங்கிகள் இணைந்து ஏற்படுத்தியவையே மண்டல கிராமப்புற வங்கிகள். இதில் மத்திய அரசின் பங்கு 50 சதவீதம். மாநில அரசின் பங்கு 15 சதவீதம்; வங்கியின் பங்கு 35 சதவீதமாக இருக்கும்.