உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

3சதவீதம் அளவுக்கு, கிடங்குகளுக்கான மாத வாடகை, நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில், கடந்த ஜனவரி - மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, 'நைட்பிராங்க்' தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களில், 2 முதல் 3 சதவீதத்துக்குள் வாடகை உயர்ந்த நிலையில், சென்னையில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.30 கோடி ரூபாய் அளவுக்கு, இந்திய விமான நிறுவனங்கள், நாளொன்றுக்கு சராசரி இழப்பை சந்திப்பதாக எச்.எஸ்.பி.சி., அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் கிட்டத்தட்ட 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதே, இந்த இழப்புக்கு காரணம்.1.78லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனை உச்சத்தை எட்டியது, 12 பொதுத்துறை வங்கிகளின் கடந்த நிதியாண்டுக்கான மொத்த லாபம். இது முந்தைய நிதியாண்டின் 1.41 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 26 சதவீதம் அதிகமாகும். மொத்த லாபத்தில், 40 சதவீத பங்குடன் எஸ்.பி.ஐ., முன்னிலை வகித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !