உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

60,000 மத்திய அரசின் ஐ.டி.ஐ., எனும் தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களில், தொழில்கல்வியை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் இணைவதற்காக ரிலையன்ஸ், அதானி மற்றும் மஹிந்திரா குழுமங்கள் உள்ளிட்ட 8 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 3,000 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிக்கும் நோக்கில், நடப்பு நிதியாண்டில், தகுதி வாய்ந்த நிறுவனங்கள் வாயிலாக 2,500 முதல் 3,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட, பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.டி.ஏ., எனப்படும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி