உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

1,900

வீட்டை சுத்தப்படுத்தி, பழுதுபார்ப்பு, அழகுபடுத்தும் சேவைகளை வழங்கி வரும் அர்பன் கம்பெனி, 1,900 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, வரும் செப்., 10ம் தேதி புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முதலீட்டாளர்கள் பங்குகள் விற்பனை வாயிலாக 1,428 கோடி ரூபாயும், புதிய பங்கு விற்பனை வாயிலாக 472 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இதற்காக, பங்கு ஒன்றின் விலை 98 - 103 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.

5,000

டென்மார்க்கைச் சேர்ந்த டிரைக் என்ற காப்பீடு நிறுவனத்திற்கு, தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குவதற்காக, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை டி.சி.எஸ்., நிறுவனம் பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கு, 4,250 கோடி ரூபாய்க்கு அதிகமான ஆர்டர் முக்கிய வருமா னமாக திகழ்கிறது. தற்போதைய சவாலான சூழலுக்கு மத்தியில், ஏழு ஆண்டுகளுக்கு சேவைகள் அளிப்பது தொடர்பாக, டிரைக் - டி.சி.எஸ்., இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை