உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆர்டர் வாய்ப்பு! ஒப்பந்த புள்ளிகள் வரவேற்பு

ஆர்டர் வாய்ப்பு! ஒப்பந்த புள்ளிகள் வரவேற்பு

1. பருத்தி மூட்டைகள் கொண்டு செல்லவதற்கு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள கூட்டுறவு நுாற்பாலைக்கு பருத்தி மூட்டைகளை கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒப்பந்த மதிப்பு: ரூ.50 லட்சம் கடைசி நாள்: நவ.20, காலை 11:00 மணி ஒப்பந்த எண்: 2026_CoT_724197_1

2. கால்நடை தீவன மூலப்பொருட்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு, கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், தாதுப்பொருட்கள் வழங்க நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன. ஒப்பந்த மதிப்பு: ரூ.40 லட்சம் கடைசி நாள்: நவ.23, பிற்பகல் 3:00 மணி ஒப்பந்த எண்: 2026_TNVAS_724210_1

3. குடிநீர் திட்ட பராமரிப்புக்கு ஒப்பந்தம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரித்தல், பழுதுகளை சரிசெய்தல், நீர் சுத்திகரிப்புக்கு தேவையான ரசாயனங்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது. பணிக்காலம்: 27 மாதங்கள் ஒப்பந்த மதிப்பு: 14.20 கோடி முதல் 16.50 கோடி ரூபாய் வரை கடைசி நாள்: டிச.7, பிற்பகல் 3:00 மணி ஒப்பந்த எண்கள்: 2026_TWAD_724234_1, 2026_TWAD_724226_1, 2026_TWAD_724247_1, 2026_TWAD_724245_1

விண்ணப்பிக்க

இணையதளம்: www.tnters.gov.inஒப்பந்த எண்ணை இணையதளத்தில் தேடி, முழு நிபந்தனைகள் மற்றும் தேவையான ஆவணங்களை பார்த்து விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !