உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரிசர்வ் வங்கி குறித்து டிவி தொடர்

ரிசர்வ் வங்கி குறித்து டிவி தொடர்

புதுடில்லி; ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டு பயணம் குறித்து, 'ஸ்டார் இந்தியா' நிறுவனம், 'வெப் சீரிஸ்' எனப்படும் இணைய தொடரை வெளியிடவுள்ளது.வங்கி துறையின் கண்காணிப்பாளரான இந்திய ரிசர்வ் வங்கி, 1935ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 90 ஆண்டுகளை நிறைவு செய்த வங்கியின் பயணம் குறித்து இணைய தொடர் தயாரிக்க, விருப்ப மனு அளிக்க, ரிசர்வ் வங்கி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.'வயாகாம் 18, ஜீ என்டர்டெயின்மென்ட், டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ், ஸ்டார் இந்தியா' என, முன்னணி நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பித்தன. இதையடுத்து, தொழில்நுட்ப மதிப்பீட்டின்போது, உரிய தகுதி பெறவில்லை என்ற அடிப்படையில் ஜீ என்டர்டெயின்மென்ட், டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த ஸ்டார் இந்தியா, வயாகாம் 18 நிறுவனங்களில், இணைய தொடரை தயாரிப்பதற்கு ஸ்டார் இந்தியா தேர்வானது. இதையடுத்து, 6.50 கோடி ரூபாய் செலவிலான டெண்டரை பெற்ற இந்நிறுவனம், தொடரை தயாரித்து வழங்கவுள்ளது.இந்திய வங்கி மற்றும் நிதித் துறையில் ரிசர்வ் வங்கி பதித்து வந்துள்ள தடங்கள் குறித்த இந்த தொடர், அரசு தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களில் ஒளிபரப்பாகும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி