உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோத்தாரியுடன் யு.ஏ.இ., நிறுவனம் ஒப்பந்தம்

கோத்தாரியுடன் யு.ஏ.இ., நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை துறைகளில் இணைந்து பணியாற்றிடும் வகையில், கோத்தாரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் 'பீயா டான்டீப் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பீயா டான்டீப், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் துப்புரவு மேலாண்மை சேவை நிறுவனமாகும். இதனுடன் ஒப்பந்தப்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி மற்றும் வணிக வாய்ப்புகளில் இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. குறிப்பாக தமிழகத்தில், மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது - தனியார் கூட்டாண்மை வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கூட்டு நிறுவனம் துப்புரவு மேலாண்மைக்கான அரசு டெண்டர்களில் பங்கேற்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ