போஸ்ட் ஆபீசில் யு.பி.ஐ., வசதி
நாடு முழுதும் அஞ்சல் அலுவலகங்களில், வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., அமைப்பில் கணக்குகளை இணைக்காததால், அஞ்சல் அலுவலகங்களில் இதுவரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இயலவில்லை. தற்போது அஞ்சல் அலுவலகத்தின் கணினி அமைப்பில், புதிய செயலி நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. ஜூலைக்குள் பணி முடிந்தவுடன், புதிய சேவை அமலுக்கு வரவுள்ளது.